சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை

தமிழகத்தின் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.சென்னையின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை
Published on

சென்னை:

வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com