சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை

நேற்று மாலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை
Published on

சென்னை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. காலையில் இருந்து வெயில் அடித்தாலும் மாலையில் பெய்த மழையால் சென்னை நகரமே குளிர்ச்சியாக மாறியது.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் இன்று கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

காலை வேளையில் மழை பெய்து வருவதால் பணிக்கு செல்வோர் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com