

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 103.64, திருத்தணியில் 103.28, மதுரை விமான நிலையம் பகுதியில் 103.1 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
மதுரை நகரத்தில் 102.92, வேலூரில் 102.74, தஞ்சை, நாகையில் தலா 102.2 டிகிரி, திருச்சியில் 101.66 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
கரூர் பரமத்தியில் 101.3, நாமக்கல்லில் 100.4, பாளையில் 100.22 மற்றும் புதுச்சேரியில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தததால் நேற்று சற்று வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், இன்று மீண்டும் வெயில் மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.