தமிழகத்தில் சென்னை உள்பட 12 இடங்களில் சதம் அடித்த வெயில்

அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
heat wave
Published on

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. வேலூரில் 104.54 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து, கடலூரில் 103.46, திருச்சி, திருத்தணியில் 102, நாகை, புதுச்சேரியில் 101.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தொண்டியில் 101.12, மதுரையில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com