தமிழகம் முழுவதும் நாளை கிராம சபை கூட்டம்

தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நாளை கிராம சபை கூட்டம்
Published on

தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி (நாளை) கிராம சபை கூட்டம் தமிழக அரசின் உத்தரவின்பேரில் நாளை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் 23-ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக, கூட்டம் நடைபெறும் இடம், நேரத்தை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com