பொறியியல் கல்லூரிகள் மீது கருணை காட்டக்கூடாது- கவர்னர் கண்டிப்பு

அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலும் இதில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பொறியியல் கல்லூரிகள் மீது கருணை காட்டக்கூடாது- கவர்னர் கண்டிப்பு
Published on

சென்னை:

அண்ணா பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக பேராசிரியர்களை பணியில் நியமித்ததாக போலியாக கணக்கு காட்டி முறைகேடு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அறிக்கை தர வேண்டும் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 124 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை திரும்ப பெறலாமா? முறை கேட்டில் ஈடுபட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகளுக்கு கருணை காட்டக் கூடாது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி, துணைவேந்தரை கண்டித்ததாக கூறப்படுகிறது.

அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலும் இதில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் நடக்கும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com