பல்லடத்தில் நால்வர் படுகொலை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

கொலை சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.குற்றவாளியை விரைவில் கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
பல்லடத்தில் நால்வர் படுகொலை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
Published on

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவரது சித்தப்பா பழனிசாமியின் மகன் மோகன்ராஜ் (45). இவர் மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜ.க., கிளை தலைவராக உள்ளார்.

நேற்றி முன்தினம் இரவு அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்து செந்தில்குமார், மோகன்ராஜ் , அவரது தாயார் புஷ்பவதி(67), புஷ்பவதியின் சகோதரி ரத்தினம்மாள்(58) ஆகியோரை வெட்டியது. இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பல்லடம் நால்வர் கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவத்தில் ஒருவர் கைதான நிலையில் மற்ற குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com