

மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு மூத்த அரசியல் தலைவர், முதிர்ச்சியான அரசியல் தலைவர் தமிழ்நாட்டில் இன்றைக்கு இருக்கக்கூடிய சூப்பர் மோஸ்ட் அரசியல்வாதி முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அப்படி கூறியிருக்க வேண்டாம். அவர் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை அவர் தவிர்த்திருக்கலாம்.
தவெகவை பொறுத்தவைரையில், நம் கூட்டணியில் இருப்பவர்களை சொன்னது சொன்னபடி முதலமைச்சர் விஜய் அவர்கள் அமைச்சரவையில் இடம் வழங்கியிருக்கிறார்.
இன்றைக்கு வன்னி அரசு தோழருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்திருப்பது என்பது அவரின் தனி மனிதருக்கு கிடையாது. அது நீண்ட நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அங்கீகாரம்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சுதந்தரத்திற்கு பிறகு முதல்முறையாக அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கிறது என்பது குரலற்றவர்களுக்கு குரலாக ஒலிப்பதற்கான அடையாளம்.
கூட்டணி என்ற பெயரில் அவர்கள் மீது ஏறி சவாரிசெய்துவிட்டு, வாக்குகளை மட்டும் வாங்கிவிட்டு அவர்களுக்கான அங்கீகாரத்தை இத்தனை நாள் தராமல் இருந்தார்கள்.
வரலாற்றி முதன்முறையாக தமிழக அரசியலில் முதலமைச்சர் விஜய் அதனை மாற்றி காட்டியிருக்கிறார். உங்கள் மூலமாக அவருக்கு நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.