திருச்சி விமான நிலையத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட், வாசனை பொருட்கள் பறிமுதல்

வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட், வாசனை பொருட்கள் பறிமுதல்
Published on

கே.கே. நகர்:

திருச்சி விமான நிலையத்திற்கு ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ஒரு பயணியின் உடமைகளை சோதனை செய்த போது அவர் 9,140 சிகரெட்டுகளை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.1.55 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே விமானத்தில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வாசனை பொருட்களை மறைத்து எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.47 ஆயிரம். இவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக விமானம் மூலமாக வெள்நாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்டவை கடத்தல் குறைந்து இருந்த நிலையில் தற்போது வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com