

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அந்த இடம் கரும்புகை மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை கொண்டு பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் இரண்டு பேர் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் மேலும் பல பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.