திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயிலில் தீவிபத்து - ரெயில் சேவை பாதிப்பு

சரக்கு ரெயிலில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.திருவள்ளூர் பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயிலில் தீவிபத்து - ரெயில் சேவை பாதிப்பு
Published on

சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயிலில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சரக்கு ரெயில் தீப்பற்றி எரியும் இடத்தில மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தீ பற்றி எரியும் இடத்தில வேடிக்கை பார்ப்பதற்காக பொதுமக்கள் யாரும் வரவேண்டாம்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com