வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் தீ விபத்து- குழந்தை உள்பட 2 பேர் பலி

பட்டாசு கடைகளில் 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.தீ மளமள எரிந்து கடையில் இருந்த பட்டாசுகளில் தீ பரவியது. இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறின.
வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் தீ விபத்து- குழந்தை உள்பட 2 பேர் பலி
Published on

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்து கோவிலில் அம்பலூர் சாலையில் தனியார் பட்டாசு கடை உள்ளது. இதன் அருகே பட்டாசு குடோனும் அமைந்துள்ளது. இந்த பட்டாசு கடைகளில் 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதியம் பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்தது. தீ மளமள எரிந்து கடையில் இருந்த பட்டாசுகளில் தீ பரவியது. இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறின.

அருகே இருந்த பட்டாசு குடோன் மீது தீப்பொறி விழுந்தது. குடோனில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடிக்க தொடங்கின. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் உட்பட குழந்தைகள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும், அம்பலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்பாபு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் 2 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com