நலத்திட்டங்களுக்கு 40 சதவீதம் நிதி செலவிடப்படுகிறது: அமைச்சர் மரிய வில்சன்

தமிழகத்தில் மொத்த வருவாய் வரவில் தவிர்க்கமுடியாத செலவு 64.4 சதவீதமாக உள்ளது.
maria wilson
Published on

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மொத்த வருவாய் வரவில் தவிர்க்க முடியாத செலவு 64.4 சதவீதமாக உள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் அளவு 14.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழக அரசு வாங்கிய கடன்களுக்கான வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ. 67,000 கோடி செலுத்தப்படுகிறது

கடந்த திமுக ஆட்சியில் முதலீடுகளுக்கு மட்டுமல்லாமல் அன்றாட செலவுகளுக்கே கடன் பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடன் அளவு மூலதன செலவை விட இரு மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழக அரசுக்கு 100 ரூபாய் வரவு எனில் 145 ரூபாய் செலவாகிறது. 45 ரூபாய் பற்றாக்குறையாக உள்ளது.

நலத்திட்டங்களால் ஆண்டுக்கு 25,000 கோடி செலவாகிறது.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களுக்காக 40 சதவீதம் செலவிடப்படுகிறது என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com