திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவிலில் சிக்கிய பெண் பக்தர் மீட்பு

ஆந்திராவை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் இடுக்கு பிள்ளையார் கோவிலின் குகை வாசல் வழியாக உள்ளே சென்று வெளி வர முயன்றுள்ளார்
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவிலில் சிக்கிய பெண் பக்தர் மீட்பு
Published on

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் 7-வது லிங்கமான குபேர லிங்கம் கோவில் அருகில் இடுக்கு பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குகை போன்ற வாசல் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி நள்ளிரவில் குடும்பத்தினருடன் கிரிவலம் வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மணிக்குமார் என்பவர் இடுக்கு பிள்ளையார் கோவில் வாசலில் உள்ளே நுழைந்துள்ளார். ஆனால் வெளியே வரமுடியாமல் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதில் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து திருவண்ணாமலையில் நேற்று உடல் பருமனான ஆந்திராவை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் இடுக்கு பிள்ளையார் கோவிலின் குகை வாசல் வழியாக உள்ளே சென்று வெளி வர முயன்றுள்ளார். ஆனால் அவர் வெளியே வர முடியாமல் சிக்கினார். இதனால் பதறிபோன அவர் கூச்சலிட்டார்.

அவரை அங்கிருந்தவர்கள் கையை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர். இந்த காட்சி வீடியோவாக தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com