பாராளுமன்ற தேர்தல் தோல்வி- வரும் 10ம் தேதி முதல் ஈபிஎஸ் ஆலோசனை

வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொகுதி வாரியாக ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.ஒவ்வொரு நாளும் 2 முதல் 3 தொகுதி நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.
பாராளுமன்ற தேர்தல் தோல்வி- வரும் 10ம் தேதி முதல் ஈபிஎஸ் ஆலோசனை
Published on

பாராளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து வரும் 10ம் தேதி முதல் ஈபிஸ் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

அதன்படி, வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொகுதி வாரியாக ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.

10ம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், 11ம் தேதி சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

ஒவ்வொரு நாளும் 2 முதல் 3 தொகுதி நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.

ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்களிடம் தோல்விக்கான காரணங்களை கேட்டறியவுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com