விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி

சுமார் இரண்டரை மணி நேரம் வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய அறிவிப்பும் இல்லை.
Edappadi Palaniswami
Published on

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதையடுத்து சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

* தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றி உள்ளது.

திமுக ஆட்சி

* சுமார் இரண்டரை மணி நேரம் வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய அறிவிப்பும் இல்லை.

* கடந்த கால திமுக ஆட்சியில் 20 துறைகளை இணைத்து வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட் போலத்தான் தவெக பட்ஜெட்டும் உள்ளது.

* ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கரும்பு டன்னுக்கு ஆதார விலை ரூ.4,500 வழங்கப்படும் என்றார்கள் அந்த அறிவிப்பு என்னவானது?

உழவர் உரிமை அட்டை

* சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு விதைப்பு கால நிதியாக ரூ.15,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்னவானது?

* உழவர் உரிமை அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 தரப்படும் என்ற வாக்குறுதி என்னவானது?

* தொடக்க வேளாண் வங்கிக்கடன்களில் உள்ள விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு என்னவானது?

தவெக அரசு

* தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க பேசிய தவெக தற்போது விவசாயிகளை ஏமாற்றி விட்டது.

* வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி உள்ளனர். இது விவசாயிகளுக்கு நன்மை தரும் பட்ஜெட் இல்லை.

* அதிமுக அரசு முன்னதாக அறிவித்த குடிமராமத்து திட்டத்தில் நீர் நிலைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டது.

குடிமராமத்து திட்டம்

* மகத்தான குடிமராமத்து திட்டத்திற்கு வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.

* ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அதிமுக அரசு தூர்வாரியதால் தான் மாநிலம் முழுவதும் நீர் நிலைகளில் நீர் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com