மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம்: விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விரிவான விசாரணை நடத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு.
மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம்: விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
Published on

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டது. விக்னேஷ் என்ற நபர் மருத்துவர் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜிக்கு அனைத்து சிகிச்சைகளை வழங்கவும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மருத்துவரை தாக்கிய விக்னேஷ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுவது உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் கிண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர் விசாரணை நடைபெறுகிறது.

அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com