மாணவர்களுக்கு போதை பழக்கம் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்- முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை

போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கவும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிளால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
மாணவர்களுக்கு போதை பழக்கம் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்- முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை
Published on

செங்கல்பட்டு:

பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை பழக்கம் தற்போது அதிகரித்து வருகின்றன. இதனால் பள்ளி பருவத்திலேயே சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவம் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கவும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிளால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்களிடம் போதைப் பொருள் பயன்பாடு உள்ளதா? என்பதை ஆய்வு செய்யவும், பள்ளிகளில் மருத்துவ பரிசோதனையின் போது மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பழக்கம் உள்ளதா? என்பதை சோதிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். போதைப்பழக்கத்துக்கு தேவையான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com