செங்கல்பட்டில் நாளை தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்களும், எம்.எல். ஏ.க்களுமான இ.கருணாநிதி எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூறி உள்ளார்.
செங்கல்பட்டில் நாளை தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு
Published on

காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள ரகமத் மகால் திருமண மண்டபத்தில் மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் நடக்கிறது.

மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்களும், எம்.எல். ஏ.க்களுமான இ.கருணாநிதி எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

கூட்டத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மநாகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள், கழக அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com