மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.திருச்சியில் கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை:

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மத்திய பாஜக அரசை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கலெக்டர் அலுவலகம் அருகே மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மேயர் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

திருச்சியில் கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரையில் மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கண்டன முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஐ.லியோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்டக் கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர் திரளாக பங்கேற்றுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com