உதயநிதி ஸ்டாலின் கைது: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கடும் அமளி: தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

இச்சம்பவம் தமிழக அரசியலிலும், டெல்லி நாடாளுமன்ற வட்டாரத்திலும் மிகப்பெரிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.
 DMK MPs-Parliament
Published on

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான 'உதயநிதி ஸ்டாலின்' காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் 'திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்' திடீர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மற்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, முதலமைச்சர் மற்றும் தவெக அரசை விமர்சித்து அவர் பேசிய சில கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து, நடிகை திரிஷாவை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி எழுந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நீலாங்கரையில் வைத்து உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்தனர்.

உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை மீறியதாகக் குற்றச்சாட்டு:

உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு முன்பாக, "காலை 12 மணி வரை கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது" என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நீதிமன்ற வழிகாட்டுதலை மீறி காவல்துறை அவரைக் கைது செய்துள்ளதாக திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் கண்டன முழக்கம்:

இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, திமுக எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடினர். தொடர்ந்து, "கைது செய்யாதே! கைது செய்யாதே!""எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிடு!" என முழக்கங்களை எழுப்பித் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

தமிழகம் முழுவதும் போராட்டம்:

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்து செல்லப்படுவதை அடுத்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழக அரசியலிலும், டெல்லி நாடாளுமன்ற வட்டாரத்திலும் மிகப்பெரிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com