நீண்ட நாட்களுக்கு பின்னர் தி.மு.க. கூட்டத்தில் பேசும் டி.ராஜேந்தர்

லட்சிய தி.மு.க. என்ற பெயரில் கட்சி தொடங்கி தி.மு.க.வுக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டு வந்தார்.நீண்ட நாட்களுக்கு பின்னர் டி.ராஜேந்தர் தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் தி.மு.க. கூட்டத்தில் பேசும் டி.ராஜேந்தர்
Published on

சென்னை:

நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் ஆரம்ப காலங்களில் தி.மு.க.வில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். பின்னர் கட்சியில் இருந்து விலகிய அவர் லட்சிய தி.மு.க. என்ற பெயரில் கட்சி தொடங்கி தி.மு.க.வுக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த ஆண்டு டி.ராஜேந்தருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது கருத்து வேறுபாடுகளை மறந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார். இந்த சூழலில் நீண்ட நாட்களுக்கு பின்னர் டி.ராஜேந்தர் தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

அம்பத்தூர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பாக இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை பாடி யாதவா தெருவில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் டி.ராஜேந்தர் கலந்துகொண்டு பேசுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com