‘இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறவில்லை’ - ப. சிதம்பரம்

கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.
‘இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறவில்லை’ - ப. சிதம்பரம்
Published on

தமிழ்நாட்டில் திமுகவுடன் 20 ஆண்டுகளாக கூட்டணியில் இடம்பெற்று வந்த காங்கிரஸ், சமீபத்திய சட்டப்பேரவை முடிவுகள் காரணமாக கூட்டணியில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி, தவெகவிற்கு தாவியது.

இதனால் காங்கிரஸ்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதற்கு பல்வேறு காரணங்களை காங்கிரஸ் முன்வைத்தது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்தது.

ஆனால் அதற்கு மாணிக்கள் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறவில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர்,

“இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக சொல்லவில்லை. இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது வேறு, விலகுவது என்பது வேறு. மற்றபடி இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக எனக்கு எந்த செய்தியும் வரவில்லை.” என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com