மக்களவை தேர்தல்- திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிறைவு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது.35 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது.
மக்களவை தேர்தல்- திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிறைவு
Published on

திமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று காலை தொடங்கியது.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்துள்ளவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

அதன்படி, மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது.

நேர்காணலின்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இந்நிலையில், 35 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது.

நாமக்கல், விழுப்புரம், சிதம்பரம், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளுக்கு மட்டும் நேர்காணல் நடைபெறவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com