பரோட்டா சாப்பிட்ட கபடி வீரர் நெஞ்சு வலியால் திடீர் மரணம்

திருமணமான ஒரே வருடத்தில் தீபக் பாண்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.புரோட்டா சாப்பிட்டு நெஞ்சு வலி வந்து கபடி வீரர் உயிரிழந்ததால் அவரது நண்பர்களும் கிராமத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.
பரோட்டா சாப்பிட்ட கபடி வீரர் நெஞ்சு வலியால் திடீர் மரணம்
Published on

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரத்தைச் சேர்ந்தவர் தீபக் பாண்டி (வயது 28). இவர் கபடி விளையாட்டு வீரர். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் புரோட்டா வாங்கி வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டார். பின்னர் தீபக் பாண்டி வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மயங்கி விழுந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் வாடிப்பட்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளிதும் பலனின்றி பரிதாபமாக தீபக் பாண்டி இறந்தார். திருமணமான ஒரே வருடத்தில் தீபக் பாண்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. புரோட்டா சாப்பிட்டு நெஞ்சு வலி வந்து கபடி வீரர் உயிரிழந்ததால் அவரது நண்பர்களும் கிராமத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com