அண்ணாமலை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு- மறுபரிசீலனை செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

நாளை பிற்பகல் 1.30 மணிக்குள் புதிய உத்தரவை பிறப்பிக்க உத்தரவு.சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தால் காவல் துறை எதற்கு, அரசு எதற்கு
அண்ணாமலை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு- மறுபரிசீலனை செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
Published on

அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து அவசர வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட உள்ளரங்கில் கடந்த முறை நிகழ்ச்சி நடைபெற்றபோது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் அனுமதி மறுக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கலந்து கொள்ளும் புத்தக வௌியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நாளை பிற்பகல் 1.30 மணிக்குள் புதிய உத்தரவை பிறப்பிக்க கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்ளரங்கில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தால் காவல் துறை எதற்கு, அரசு எதற்கு ? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com