காதர் மொகிதீன் மகன் இறப்பு- எடப்பாடி பழனிசாமி இரங்கல்

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Kadhar Mohideen- EPS
Published on

ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனின் மகன் கலீலூர் ரஹ்மான் காலமான செய்தி அறிந்து துயருற்றேன்

பாசமிகு மகனை இழந்து வாடும் காதர் மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் திரு. காதர் மொகிதீன் அவர்களின் மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.

பாசமிகு மகனை இழந்து வாடும் காதர் மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மறைந்த கலீலூர் ரஹ்மான் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com