தயாளு அம்மாள் 90-வது பிறந்தநாள்: கோபாலபுரம் வீட்டில் மு.க.ஸ்டாலின்-மு.க.அழகிரி சந்திப்பு

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
தயாளு அம்மாள் 90-வது பிறந்தநாள்: கோபாலபுரம் வீட்டில் மு.க.ஸ்டாலின்-மு.க.அழகிரி சந்திப்பு
Published on

சென்னை:

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் (வயது 90) கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார்.

வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவரை அவ்வப்போது அவரது மகன்களான மு.க.அழகிரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் தனித்தனியாக நேரம் கிடைக்கும்போது வந்து பார்த்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில் இன்று தயாளு அம்மாளுக்கு 90-வது பிறந்தநாள் என்பதால் கோபாலபுரம் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினார்கள்.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது அண்ணன் மு.க.அழகிரி, தம்பி மு.க. தமிழரசு, செல்வி, கனிமொழி, தயாநிதிமாறன், அமிர்தம் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

இவர்களுடன் அமைச்சர் உதயநிதி, நடிகர் அருள்நிதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com