

சென்னை:
வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல், காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சென்னையில் இன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விமான நிலையத்தில் உள்ள மக்கள் வசதிக்காக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. விமான நிலையத்தில் இருந்து பிராட்வே, கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் கவனத்திற்கு! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை, விமான நிலையத்தில் இருக்கும் பயணிகளின் வசதிக்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பாக சென்னை விமான நிலையத்திலிருந்து சென்ட்ரல்,… pic.twitter.com/sQASMS7tsw