தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை கல்லூரிகளில் விறுவிறுப்பாக நடந்து வரும் கலந்தாய்வு

கல்லூரி முதல்வர்கள் தலைமையில் உதவி பேராசிரியர்கள் கலந்தாய்வு நடத்தினர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை கல்லூரிகளில் விறுவிறுப்பாக நடந்து வரும் கலந்தாய்வு
Published on

தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் இன்று மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. அந்தந்த கல்லூரிகளில் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

அரசு கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பத்தை சுமார் 2½ லட்சம் மாணவ மாணவிகள் அவர்கள் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒவ்வொரு கல்லூரிக்கும் வந்தனர்.

சென்னையில் மாநில கல்லூரி, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி, ஆர்.கே. நகர் கலைக் கல்லூரி மற்றும் ராணி மேரி மகளிர் கல்லூரி உள்ளிட்ட அரசு கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

கல்லூரி முதல்வர்கள் தலைமையில் உதவி பேராசிரியர்கள் கலந்தாய்வு நடத்தினர். 400 மதிப்பெண்ணுக்கு மேலே எடுத்த மாணவ மாணவிகளுக்கு இன்று கலந்தாய்வு நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com