முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் ஆலோசனை

டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய அலுவலக செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.தி.மு.க. முகவர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் ஆலோசனை
Published on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலையில் அண்ணா அறிவாலயம் சென்று கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய அலுவலக செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா குறித்தும், டெல்லியில் 1-ந்தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்தும் வாக்கு எண்ணிக்கையின் போது தி.மு.க. முகவர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com