மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே ஒப்பந்த தொழிலாளர்கள் மின்கம்பத்தில் ஏறி போராட்டம்

பல்வேறு பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.மின் இணைப்பை துண்டித்து தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே ஒப்பந்த தொழிலாளர்கள் மின்கம்பத்தில் ஏறி போராட்டம்
Published on

மேட்டூர்:

மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் நாளொன்றுக்கு 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 2 அனல் மின் நிலையங்களிலும் நிலக்கரி கையாளும் பிரிவு, மின் உற்பத்தி பிரிவு, சாம்பல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் வேலையை புறக்கணித்து பணி நிரந்தரம் செய்யக்கோரி தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிடுமாறு தொழிலாளர்களுடன் அனல் மின் நிலைய நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனல் மின் நிலையம் எதிரே உள்ள மின் கம்பத்தில் 5 தொழிலாளர்கள் ஏறி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மின் கம்பத்தில் ஏறிய தொழிலாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மின் இணைப்பை துண்டித்து தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com