போராடும் மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் நாளை கண்டன பொதுக்கூட்டம்

தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அமைச்சர் ராஜ்மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அமைச்சர் வன்னியரசு கலந்து கொள்கிறார்கள்.
காங்கிரஸ் போராட்டம்
காங்கிரஸ் போராட்டம்
Published on

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசை காங்கிரஸ் கண்டித்துள்ளது. மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.

சென்னையில் நாளை (சனிக்கிழமை) காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாக தங்கள் கண்டனங்களை தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும் கொடூரமான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நாளை மாலை 5.30 மணியளவில் சென்னை தியாகராய நகர் பஸ் நிலையம் பின்புறம் முத்துரங்கம் சாலையில் நடைபெற உள்ளது.

அமைச்சர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அமைச்சர் ராஜ்மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அமைச்சர் வன்னியரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுப்புராயன் எம்.பி., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வெங்கடேசன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி எம்.பி., ம.தி.மு.க. கட்சி சார்பில் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகிறார்கள்.

இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான குலாம் அகமது மிர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர் ராஜேஷ்குமார் வரவேற்புரை ஆற்றுகிறார். அமைச்சர் பெ.விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் விளக்க உரையாற்றுகிறார்.

கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com