முதலமைச்சர் விஜய் கரூர் செல்கிறார் - கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க திட்டம்

சட்டசபை தேர்தலில் த.வெ.க. அதிக இடங்களை பெற்று வெற்றி பெற்றது.
CM Vijay
Published on

தமிழக முதலமைச்சர் விஜய் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் கரூர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.

இதையடுத்து த.வெ.க. தலைவர், முதலமைச்சர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பாதுகாப்பு கருதி மாமல்லபுரத்திற்கு வர வழைத்து ஆறுதல் கூறியதுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 லட்சம் நிதியினை அவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாகவும் செலுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களிடம் முதலமைச்சர் விஜய் பேசும்போது என்றும் உங்களுடன் இருப்பேன். உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பேன் என பேசினார்.

மீண்டும் சந்திப்பு

இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. அதிக இடங்களை பெற்று வெற்றி பெற்றது. தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றார்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் அடுத்த மாதம் (ஜூலை) 2-வது வாரத்தில் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com