பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தலைமை செயலகத்திற்கு அழைத்து முதலமைச்சர் விஜயை வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
Published on

தலைமைச் செயலகத்தில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா முதலமைச்சர் விஜய்யை சந்தித்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

நார்வே ‘செஸ்’ தொடரில் வெற்றி பெற்று பதக்கம் பெற்றதை கேள்விப்பட்ட முதலமைச்சர் விஜய் என்னை நேரில் வருமாறு அழைத்திருந்தார். அதன்படி முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்தேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை. மிகவும் சந்தோஷமாக இருந்தது.

முதலமைச்சர் விஜய் ‘செஸ்’ போர்டு எடுத்து வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார். ஆமாம் என்றேன். உடனே அவரது அறையிலேயே ‘செஸ்’போர்டு வைத்து அவருடன் விளையாடினேன்.

முதலமைச்சர் விஜய் நன்றாகவே ‘செஸ்’ விளையாடினார். இறுதியில் நான் வெற்றி பெற்றேன். சுமார் 15 நிமிடம் விளையாடினேன்.

நீங்கள் எவ்வளவு நாளாக‘செஸ்’ விளையாடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் நண்பர்களுடன் செஸ் விளையாடுவேன் என்றார். அடுத்து வரக்கூடிய விளையாட்டு பற்றி கேட்டார். அதுபற்றி முதலமைச்சருடன் பேசினேன். அவருடன் விளையாடியது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவரிடம் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com