இமாச்சலப் பிரதேச முதல் மந்திரிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இமாசல பிரதேச மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். புதிய முதல் மந்திரிக்கு பிரதமர் மோடி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on

சென்னை:

இமாசல பிரதேச மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. சிம்லாவில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக முதல்-மந்திரியாக சுக்விந்தர் சிங் சுகு (58), துணை முதல் மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரி தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, இமாசல பிரதேச மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சுக்விந்தர் சிங் சுகு இன்று பதவி ஏற்றார்.

இந்நிலையில், புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுகுவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இமாச்சல பிரதேச முதல் மந்திரியாக பதவியேற்ற சுக்விந்தர் சிங் சுகுவுக்கு வாழ்த்துகள். உங்கள் உயர்வு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. இமாசல பிரதேச மக்களுக்கு சேவை செய்வதில், வெற்றிகரமான பதவிக் காலம் அமைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com