

சென்னையை சேர்ந்த செஸ் வீராங்கனையான சவிதா ஸ்ரீ பாஸ்கர் மங்கோலியா நாட்டின் தலைநகரான உலான்படோரில் நடைபெற்ற 21வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2026ல் தங்கப் பதக்கம் வென்றார்.
மேலும் 2027 FIDE மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்று அசத்தியுள்ளார்.
இந்நிலையில் வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னையைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்த அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.