கள்ளச்சாராயம் விற்பனை செய்த சின்னதுரை கைது

கள்ளக்குறிச்சியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜனுக்கு, சின்னதுரை சாராயத்தை விற்பனை செய்துள்ளார்.
கள்ளச்சாராயம் விற்பனை செய்த சின்னதுரை கைது
Published on

கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில், சாராயம் விற்பனை செய்த சின்னதுரை என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாராய வியாபாரி சின்ன துரையை கள்ளக்குறிச்சியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜனுக்கு, சின்னதுரை சாராயத்தை விற்பனை செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com