கர்நாடக புதிய முதல்வருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

டி.கே.சிவக்குமாருடன் 14 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
கர்நாடக புதிய முதல்வருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து
Published on

கர்நாடகத்தின் புதிய முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் இன்று பதவியேற்றார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல் மந்திரியாக பரமேஸ்வரா பதவியேற்றார்.

இந்தப் பதவியேற்பு விழா பெங்களூரில் உள்ள லோக்பவனில் நடந்தது. டி.கே.சிவக்குமாருடன் 14 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமாருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிடுகையில்,"கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.டி.கே. சிவகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com