சென்னையில் பலத்த மழை

குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
rain
Published on

வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டம்

இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது, முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

மழை

இந்நிலையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, வேப்பேரி, அசோக் நகர், பெரியமேடு, கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

மக்கள் மகிழ்ச்சி

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென பெய்த இந்த மழையால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com