தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சிபிஐ மேல் விசாரணை- தமிழக அரசு விளக்கம்

தமிழக அரசு 2022ம் ஆண்டு அக்டோபரில் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.விசாரணை ஏப்ரல் 5ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சிபிஐ மேல் விசாரணை- தமிழக அரசு விளக்கம்
Published on

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிபிஐ மேல் விசாரணை நடத்தி வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த வழக்கில், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்கும் வகையில் தமிழக அரசு 2022 அக்டோபரில் பிறப்பித்த அரசாணைக்கு மனுதாரர் தடை விதிக்க வேண்டும் எனவும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

அரசின் பதில் மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை ஏப்ரல் 5ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com