அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது வழக்குப்பதிவு

ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக புகார்.தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது வழக்குப்பதிவு
Published on

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேற்கு மாம்பலம் பகுதியில் கட்டாத கட்டிடத்தை கட்டியதாக கணக்கு காட்டி ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

மேலும், எம்எல்ஏ தொகுதி நிதியை தவறாக கையாண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2016- 2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் சத்யா அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தபோது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா, உதவி பொறியாளர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com