மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கு - சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

மின்வாரியத்தின் விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கு - சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
Published on

சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்தில் டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய தகவல்களை கொண்ட ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக மேலாண்மை துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்வாரியத்தின் விஜிலென்ஸ் அதிகாரிகளிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கோபிநாத், முரளிமனோகர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை காவல்துறை டி.ஜி.பி.க்கு பரிந்துரை செய்யப்பட்டதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com