விஜய் என்ற பெயர் கொண்ட நிர்வாகிகளை 'தளபதி பெயர் உடையவர்களே' என கூறிய புஸ்ஸி ஆனந்த்

புதுக்கோட்டையில் தவெகவின் அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று திறந்து வைத்தார். புதுக்கோட்டையின் கட்சி நிர்வாகிகளின் பெயரை அவர் படித்து காட்டினார்.
விஜய் என்ற பெயர் கொண்ட நிர்வாகிகளை 'தளபதி பெயர் உடையவர்களே' என கூறிய புஸ்ஸி ஆனந்த்
Published on

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை, நடிகர் விஜய் துவங்கியுள்ளார். கட்சியை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்டது. ஆனால், கட்சியை பதிவு செய்யாமல், தேர்தல் கமிஷன் நிலுவையில் வைத்தது.

இதை தொடர்ந்து, பொதுச் செயலராக புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்த், பொருளாளராக வெங்கட்ரமணன், தலைமை நிலைய செயலராக கடலுார் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலராக, வேலுார் தாஹீரா ஆகியோரை, விஜய் நியமித்தார்.

இதை தொடர்ந்து விபரங்கள், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதை ஏற்றுள்ள தேர்தல் கமிஷன், கட்சி தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 11ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, கெடுவிதித்துள்ளது. ஆட்சேபனைகள் வராத பட்சத்தில், தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்து, இம்மாத இறுதிக்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் தவெகவின் அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று திறந்து வைத்தார். அப்போது, அந்நிகழ்விற்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகளின் பெயரை அவர் படித்து காட்டினார்.

அப்போது விஜய் என்ற பெயர் கொண்ட நிர்வாகிகளின் பெயரை விஜய் என சொல்லாமல் 'தளபதி பெயர் உடையவர்களே' என புஸ்ஸி ஆனந்த் படித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com