

தமிழகத்தில் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் வந்தது.
அப்போது, போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு நியமித்து 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசு வாதித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், பொது மக்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.