

திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக வந்தனா கார்க் கடந்த சில தினங்களுக்கு முன் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், இவரது இல்லம் மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட வெடிகுண்டு மிரட்டலை மாவோயிஸ்டுகள் விடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த மின்னஞ்சலில் ஆட்சியர் வந்தனா கார்க் இலத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் படைகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.