பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் தொடங்கியது

கல்பாக்கத்தில் 500 மெகாவாட் வேக ஈனுலை மின் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார்.பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் உரையாற்ற இருக்கிறார்.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் தொடங்கியது
Published on

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக பொதுக்கூட்டம் தொடங்கியது.

இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கு, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகளும் வரவேற்பு அளித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் சென்றார்.

அங்கு, 500 மெகாவாட் வேக ஈனுலை மின் உற்பத்தி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி, பின்னர் சாலை மார்க்கமாக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.

இந்நிலையில், பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் உரையாற்ற இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com