

பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க கோரியும், பாலியல் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் பாஜக சார்பில் சென்னையில் வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறிய அவர், இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி பாகுபாடின்றி, மதம் பாகுபாடின்றி அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதுபோன்ற விவகாரங்களை லேசாக விட்டுவிடக்கூடாது. இந்த ஆட்சி ஒரு விஷக்கிருமி. முதுகெலும்பு இல்லாத முதலமைச்சர் சட்டத்தை பாதுகாக்க தவறிய முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.