அத்துமீறிய காதல் ஜோடியால் பரபரப்பு: போலீசார் வருவது கூட தெரியாமல் முத்த மழை பொழிந்தனர்

பேருந்து நிலையத்தில் வெளிப்படையாக முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக காதல் செய்து வருகின்றனர்.பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
அத்துமீறிய காதல்ஜோடியையும், போலீசார் எச்சரித்து அனுப்பியதையும் படத்தில் காணலாம்.
அத்துமீறிய காதல்ஜோடியையும், போலீசார் எச்சரித்து அனுப்பியதையும் படத்தில் காணலாம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தங்களது ஊர்களுக்கு செல்ல பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் தினமும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களில் சில காதல் ஜோடிகள் பேருந்து நிலையத்தில் வெளிப்படையாக முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக காதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் காதல் ஜோடிகள் அத்துமீறியதை கண்ட பொதுமக்கள் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நேரடியாக சென்று பார்த்த போதும் போலீசார் வருவது கூட தெரியாமல் கல்லூரி காதல் ஜோடி முத்தமழை பொழிந்து கொண்டிருந்தனர். இருவரையும் பிடித்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com