We The Leaders: அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் 24 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் இணைவு

இந்த இயக்கத்தை பின்னர் அரசியல் அரசியல் கட்சியாக கட்டமைக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.
We The Leaders: அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் 24 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் இணைவு
Published on

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை நேற்று முன் தினம் சமூக வலைதளம் மூலம் நேரலையில் மக்களை சந்தித்து பேசினார்.

அதில், wetheleader.org என்ற இயக்கத்தை தொடங்குவதாக அண்ணாமலை அறிவித்தார். இந்த இயக்கத்தை பின்னர் அரசியல் அரசியல் கட்சியாக கட்டமைக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

www.wetheleader.org இணையதளத்தில் தங்கள் பெயர், மொபைல் எண்ணை பதிவு செய்து பலர் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர்.

அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்ட 4 மணிநேரத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் wetheleader இயக்கத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் அவர் அறிவிப்பை வெளியிட்ட 24 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் www.wetheleader.org மூலம் அவரின் இயக்கத்தில் இணைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com